இடம் சுட்டி பொருள் விளக்கம் - பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
வாழ்க வையகம். வாழ்க வளமுடன். அனைத்து வேதாத்திரிய அன்பர்களுக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன். ‘இடம் சுட்டி பொருள் விளக்கம்’ எனும் ஒரு புதிய முயற்சியில் மகிரிஷியால் எடுத்துக்காட்டப் பட்ட ஒரு கவிதையை காட்டி அன்பர்களின் சிந்தனையைத் தூண்டும் முயற்சியில் கிடைத்த நேரடி பதில்கள் அதிகம் ஆர்வமூட்டுவதாக இருந்தது. இந்தக் கவிதை, அரிச்சந்திர புராணத்தில் இடம்பெற்றது. நோக்கம், அன்பர்கள் அரிச்சந்திர புராணம் படிக்க வேண்டுமென்பதல்ல. மாறாக, வேதாத்திரி மகரிஷி அவர்கள், எதுஎதுவெல்லாம் படித்து, சிந்தித்து, நாம் அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு, எளிதாக நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைத்துக் கொடுத்துள்ளார் என்பதை நினைத்து, குருவின் பெருமையை போற்றி, வேதாத்திரிய வழியில் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதே, நோக்கம். இதோ வேதாத்திரி மகரிஷி அவர்களின் குரலில் இந்தக் கவியையும் அதை சுட்டிக் காட்டியதற்கான காரணத்தையும் கேட்டு மகிழுங்கள். வேதாத்திரி மகரிஷியின் குரலில் விளக்கம் - இங்கே சொடுக்கவும் இது போன்ற முயற்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றாலும், இன்னும் எவ்வாறு ச
வாழ்க வளமுடன்
ReplyDelete